your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Thursday, November 7, 2013

அடிக்கடி கோபம் வந்து கையில் கிடைத்ததை விட்டி எ றி கிறீர்களா ?

அடிக்கடி உங்கள் டிரைவிங் லைசன்சை தொலைத்து விட்டு அவஸ்தைப் படுகிறீர்களா ?

அடிக்கடி கோபம் வந்து கையில் கிடைத்ததை விட்டி எ றி கிறீர்களா ?

எந்த ஒரு வேலையிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லையா ?


ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்கிறீர்களா ?

இதை படிக்காமல் போய் விடாதீர்கள்.

உங்களுக்கு ஏ . டி. ஹெச். டி. என்று சொல்லப்படும் ஒரு மன அழுத்த நிலை இருக்கலாம்.

தொடர்ந்து படிக்க
http://www.webmd.com/add-adhd/ss/slideshow-adhd-in-adults?ecd=wnl_men_110613&ctr=wnl-men-110613_ld-stry_1&mb=



Saturday, October 26, 2013

காபி குடியர்களுக்கு இல்லை வெறியர்களுக்கு ஒரு சின்ன க்விஸ்

காபி குடியர்களுக்கு இல்லை வெறியர்களுக்கு ஒரு சிறிய பரீட்சை.

இது ஒரு சின்ன க்விஸ் ப்ரோக்ராம். 



காபி பற்றிய உங்கள் பொது அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உங்களுக்கே உணர்த்தும்.

ஒரு சின்ன சாம்பிள்.

ஒரு வருஷத்தில் நீங்கள் குடிக்கும் காபியின் மொத்த அளவு எத்தனை இருக்கும் ?

(ஒரு சராசரி காபி குடியரின் நிலையில் இருந்து இந்தக்கேள்விக்கு பதில் அளிக்கலாம் )

மற்ற வினாக்களுக்கு இந்த தொடர்பினை க்ளிக்கவும்.

http://www.webmd.com/food-recipes/rm-quiz-coffee?ecd=wnl_alt_102613&ctr=wnl-alt-102613_ld-stry_2&mb=

ஒரு கணக்கு போட்டு பார்த்தேன்.

கடந்த 48 ஆண்டுகளில் நான் வாங்கிய காப்பி தூளின் எடை 1104 கிலோ.

காபி கிலோ ஐந்து ரூபாய் விற்ற காலம் முதல் இப்பொழுது 398 ரூபாய் விற்கும் காலம் வரை காபியை ரசித்து குடிக்கும் என்னைப்போல் இந்த தலை முறையும் காபிக்கு அடிமையா என்று தெரியவில்லை.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தமிழ் நாடு அளவுக்கு காபியை நேசிப்பவர்கள் இல்லை.

இருந்தாலும் நான் இந்த க்விஸ் ப்ரோக்ராமில் பாஸ் ஆகவில்லை. பெயில்.


Tuesday, October 8, 2013

ஹெபபடிஸ் ஏ



மழை காலம் துவங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது.  கொசுத்தொல்லை வேறு.  என்ன தான் சென்னை கார்பொரேஷன் ஊழியர்கள் ஒரு பக்கம் ஆங்காங்கே சாக்கடை அடைப்புகளை சரிப்படுத்தினாலும், இன்னொரு இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது.

இன்று ஹிந்து தினசரி செய்தி படி, சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்களில் கழிவு நீர் குடி தண்ணீருடன் கலக்கின்றது என சென்னை கார்பொரேஷன் அதிகாரிகள் கண்டுபிடித்து அந்த குடியிருப்புகளில் உள்ள அதிகாரபூர்வமற்ற கனெக்சன் களை சரி செய்ய முனைந்து இருக்கிறார்கள்.

குடி நீரில் சாக்கடை கலந்தால், வரும் வியாதிகள் கணக்கில் அடங்கா.  உடன் வரும் நோய்கள், வாந்தி, பேதி தவிர, டைபாய்டு , ஜாண்டிஸ், போன்றவையும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன

மக்கள் கார்ப்பொரேஷன் வினியோக்கிக்கும் நீரை காய்ச்சிக் குடிக்கவேண்டும் . ஹோட்டல்களில் ஆர் ஓ. முறைப்படி நீர் சுத்தம் செய்யப்படவேண்டும்.

இது தவிர அடுக்கு மாடி கட்டிடங்கள், அபார்ட்மெண்ட்களில் உள்ள நீர் தொட்டிகள் வாரம் ஒரு முறையாவது சுத்தப்படுத்தப்பட வேண்டும்.  எந்த அளவுக்கு ஒரு லிட்டர் நீருக்கு க்ளோரின் ப்ளீச்சிங் பவுடர் கலக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் கலந்து நீரை சுத்தப்படுத்தல் வேண்டும்.

நவராத்திரி தீபாவளி நேரங்களில் சென்னையில் பல இடங்களில் காற்றும் மாசு பட்டு இருக்கிறது.  சென்னை தி. நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம்,  கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு இவை புகை மண்டலமாக காணப்படுகின்றன .


 தெரு ஒர கையேந்தி பவன்களில் தான் மக்கள் பெரும்பாலும் சுண்டல், வடை, பஜ்ஜி, போண்டா, பரோட்டா என சாப்பிட்டு எச்சல் தட்டை ஆங்காங்கே இறைத்து விடுகிறார்கள்.  ஒவ்வொரு வீதியிலும் இந்த கையேந்தி கடைகள் தள்ளு வண்டிகளில் பேல் பூரி, ஜாங்கிரி, வடை போன்றவை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. இவை எந்த அளவுக்கு சுத்தமானவை
இவற்றினால் வரும் சுகாதார அவலங்களை chennai Corporation Health Officials மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

சில வியாதிகள் தொத்து  வியாதிகள். குறிப்பாக ஹெபபடிஸ் ஏ . . எப்படி பரவுகின்றன அவற்றில் இருந்து எப்படி நாம் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்
என இந்த தொடர்பு லிங்கில் காணப்படும் வீடியோ சொல்கிறது.

அவசியம் பார்க்கவும்.





http://www.webmd.com/hepatitis/ss/slideshow-hepatitis-overview

Tuesday, September 17, 2013

Functional M R I . An Innovative Step


நாம் எல்லோரும் எம்.ஆர். ஐ. MRI கேள்விப்பட்டிருக்கிறோம்.

பல தடவைகள், நமக்கு அல்லது நமது குடும்பத்தாருக்கு அல்லது நண்பருக்கு இந்த எம்.ஆர். ஐ. எடுத்திருப்பார்கள்.

எந்த ஒரு உடல் பாகத்தையும் சீரிய வகையில் அறிய உதவுகிறது. இந்த எம்.ஆர். ஐ.

இருப்பினும் எம். ஆர். ஐ. செய்வதெல்லாமே உடலின் எந்த ஒரு பகுதியின் தற்பொழுதைய நிலை, அனாடமிக், பிசியலாஜிகல் , தொடர்ந்து பதோலாஜிகல் தான்.  To find out the anatomic,physiological structure as well as to find out
pathological problems.

இப்பொழுது பன்க்சனல் எம்.ஆர். ஐ. என்று ஒன்று புதிதாக வருகிறது.

அது எப்படி நமக்கு உதவுகிறது ?

சாதாரண எம்.ஆர். ஐ. நம்மை ஒரு அசையாத நிலையில் தான் படம் எடுக்கிறது. ரூ

இதுவோ நம்மை ஒரு வேலை செய்யச்சொல்லி, அந்த வேலை செய்யும்பொழுது உறுப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை துல்லியமாக கண்காணிக்கின்றன. கார்டியோக்ராம் எடுக்கும் போதோ அல்லது ஒரு வயிறு பகுதி அல்ட்ர சோன் இமேஜ் எடுக்கும்போது, முறையே,  இருதயம் துடிப்பதையோ (அதன் சத்தம் லப்,டப் உட்பட ) அல்லது சிறுநீரகத்தில் சிறுநீர் சுரப்பத்தையும் பார்க்க முடிகிறது.

இந்த பன்க்ஷனல் எம். ஆர். ஐ. இல், ஒரு நபர் குறிப்பிட்ட கட்டளைக்கு உட்பட்டு, அதை செய்கிறார் என்று வைத்துக்கொண்டால், அந்த கட்டளை அவரது மூளை தனை எந்த பகுதியில் எவ்வாறு சென்று அடைகிறது, அது அங்கே சென்று அடைந்த உடன் மூளையின் செல்களில் தொடரும் ரசாயன மாற்றங்கள் என்ன என்பதெல்லாம் கண்காணிக்கிறது.

பல்வேறு நோய்களுக்கு மட்டுமல்லாது, பல் வேறு நிலைகளுக்கும் ஆட்டிசம், டிப்ரஷன் உட்பட மருத்துவ முன்னேற்றத்துக்கு இது ஒரு வழி காட்டியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இது பற்றிய செய்தி தொகுப்பை கீழே படிக்கலாம்.

கடந்த பத்து வருடங்களில் மருத்துவ சாதனைகளில் முக்கியமானவை என்ன என்று படிக்க இங்கே கிளிக்குங்கள்.



நன்றி: வெப். எம்.டி.
10. Scientists Peer Into Mind With Functional MRI
Mind-reading has moved from carnival attraction to the halls of medicine with what is known as a functional MRI.
The medical mind-readers are not trying to identify a card randomly selected from a deck -- they are using sophisticated imaging techniques to map the way the mind works.
The process, often called fMRI, traces the working of neurons -- brain cells -- by tracking changes in the oxygen levels and blood flow to the brain. The more brain activity in one area, the more oxygen will be used and the more blood will flow to that area. The patient lies awake inside an MRI scanner. He or she is asked to perform a simple task, like identifying a color or solving a math problem.

As the patient answers the question, the fMRI tracks the areas of the brain that are activated by tracing the speed at which the cells metabolize the sugar, or glucose.
First developed in the early 1990s, fMRI began to shape research at the beginning of the decade.
"It has certainly taken off in the past 10 years as a means for studying the living human brain in action," said Caselli. "It has given us innumerable insights into cognition, social interactions, reward systems, decision-making, and so on."
Using this technique, researchers are learning valuable information about disease such as depression, brain cancer, autism, memory disorders, and even conditions such as the skin disorder psoriasis


Tuesday, September 10, 2013

WHAT BOTHERS U ? உங்கள் உடம்புக்கு என்ன ?

உங்கள் உடம்புக்கு என்ன ?

SYMPTOMS CHECKER .
பல்வேறு நோய்களுக்கு ஒரே விதமான குறிகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  
உதாரணமாக உங்கள் புறங்கால் (அதாவது காலில், பாதத்திற்கு மேல் உள்ள பகுதி ) சற்று வீக்கமாக இருப்பது போலத் தோன்றினால், அது என்னவாக இருக்கலாம்.
நீங்கள் ஒரு இருபது முப்பது வயது இளைஞர் ஆக இருக்கும் பட்சத்தில் அது ஒரு பூச்சி கடியாக, கொசுக் கடியாக இருக்கலாம். சற்று அரிப்பது போலத் தோன்றினால் ஏதோ ஒரு அலர்ஜி தான். கொஞ்ச தனக்குத் தானே சரியாகிவிடும் self limiting என்று நினைப்பதில் தவறில்லை.
ஆனால், நீங்கள் ஒரு அறுபது வயதுக்கு மேற்பட்டவராய் இருந்து உங்கள் புறங்கால் , சற்று வீங்கி தொடர்ந்து இருந்தால், அது என்னவாக இருக்கலாம்?

உங்களுக்கு ரத்த கொதிப்பு இருக்கையில் ஒரு இருதய நோயாக அயோர்டிக் ரிகர்ஜிடேஷன் ஆக இருக்கலாம்.
சிறுநீர் செல்வதில் தொடர்ந்து உபாதைகள் இருந்தால் அது கிட்னி சம்பந்தப்பட்ட சமாசாரம் ஆக இருக்கலாம்.
வாடர் ரிடென்சன் ஆக, வீனஸ் இன்சபீயன்ஷி எனச் சொல்லப்படும் நிலை. அதாவது உங்கள் ரத்த நாளங்களில் முக்கியமாக கால்களில் ஏதேனும் அடைப்போ அல்லது சிறிய கட்டிகளோ இருக்கலாம்.
இத்தனையும் இல்லை, காலை வெகு நேரம் தொங்கப்போட்டுக்கொண்டு இருந்தாலும் இருக்கலாம்.

இது தான் என்று சும்மா இருப்பது சரியல்ல.
SHORT LIST THE POSSIBLE CONDITIONS THAT COULD HAVE CAUSED THE SYMPTOMS.
என்னவாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்பது நல்லது.
PLEASE SPEND A FEW MINUTES BY OPENING THE LINK BELOW .
கீழ்க்கண்ட வலைதனை திறந்து அங்கு வரும் கேள்வி படத்தை பார்த்து அதற்கேற்றபடி உங்கள் பதிலை அளியுங்கள்.
http://symptoms.webmd.com/default.htm#introView

ஒரு நாலைந்து நிலைகளுக்குள் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
FIRST CHECK UP WITH YOUR FAMILY PHYSICIAN.
நீங்களே அதற்கான ஒரு ஸ்பெசலிஸ்ட் ஒருவரை அணுகாமல், உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.
THEN FIX THE SPECIALIST.
அவர் மூலம், தேவைப்படின், சிறப்பு மருத்துவரை அணுகுங்கள்.
NEVER EVER TREAT THE SYMPTOMS FOR TOO LONG.
நோய்க்கான அறிகுறிகள் எதையும் நீங்களே தொடர்ந்து வீட்டு வைத்தியம் என்று செய்து கொண்டு இருக்க வேண்டா. ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குள் எதுவுமே இயல்பான நிலைக்குத் திரும்பாவிடின் மருத்துவரை அணுகுவது நன்று.
FIX THE ROOT CAUSE OF THE PROBLEM OR THE SYMPTOM
GET PROPER ADVICE
எந்த ஒரு உபாதையாக இருந்தாலும் அதற்கான மூல காரணம் அறியப்படவேண்டும்.
BY FIXING THE RIGHT PHYSICIAN WHO SHOULD BE ABLE TO
FIX YOUR PROBLEM
FIND FOR U THE RIGHT SOLUTION.
சரியான மருத்துவர் தான் உங்களுக்கு சரியான மருந்துகளை தர இயலும்.

DONT BE IN HASTE AS OTHERWISE U WILL BE WASTING NOT ONLY YOUR MONEY AND ENERGY BUT YOUR PRECIOUS TIME TOO.

இதுதான் நோய் என்று நீங்களே முடிவு செய்வதை விட, முதற்கண் உங்கள் குடும்ப வைத்தியரை அணுகுவது நன்று.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று வாளா இருந்துவிடாதீர்கள். 

Saturday, September 7, 2013

தேவையில்லா வைடம்மின் சாப்பிட்டு ....


உடம்புக்கு வந்துடுச்சுன்னா, ஓடறோம் டாக்டர் கிட்டே.
அவரும் ஒரு லிஸ்ட் போட்டு, இந்தா சாப்பிடு அப்படின்னு சொல்றாரு.

லிஸ்டை பார்த்தா பத்து பேரு கீது.

இன்னா சாரே.. இத்தனையுமா ? அப்படின்னு கேட்கறப்போ,

இல்ல, முதல் ஒன்னை மட்டும் மூணு நாளைக்கு,
அடுத்ததெல்லாம் அடுத்த ஆறு மாசத்துக்கு அப்படின்னு சொல்றாரு.

என்னனு பார்த்தா,

ஏதோ ஏதோ புரியாத பெயர்லே எழுதி இருக்குங்க..

அடிநோசில்,
ஒமேகா 3 ஜி.
பயோடின்
பாலிக் ஆசிட்.
ப்ரோ பயோடிக்


இதுல்லாம் நான் கொடுத்ததில்ல இருக்கு ...கொஞ்சம் தொடர்ந்து சாப்பிடுங்க..
அப்படின்னு சொல்றாரு.

முன்னாடி எல்லாம் வைட்டமின் ஏ , பி லே பி 1 , பி 2 , ப 6, பி 12 அப்படின்னு பத்து வகை, சி, டி, இ, அப்படின்னு சொல்வாக.

இப்ப பூட் சப்ளிமெண்ட் அப்படின்னு சொல்றாக. ஆண்டி ஆக்சிண்டேன்ட். நான் கூட புரியாம எந்த ஆண்டிக்கு  ஆக்சிடெண்டு அப்படின்னு கேட்டா சிரிக்கிறாரு.

இதெல்லாம் அந்த ஆண்டி இல்ல.  உடம்புக்கு வர்ற நோயை தடுக்கற சக்தி வாய்ந்த உயிருச்சத்துக்க அப்படின்னு இங்க்லீசுலே சொல்றாரு.

எல்லாமே யான விலை குதிரை விலை.

என்ன செய்யறது?  உடம்பு முக்கியமில்ல.

பென்சன்லே முக்கா வாசி மருந்துக்கே போயிடறது.

உங்களுக்கு என்ன டானிக் வேனும் வைட்டமின் வேணும் அப்படிங்கறது
தெரிஞ்சுக்கணும் அப்படின்னு இண்டரஸ்ட் இருந்தா...

இந்த இடத்துக்கு போய் எல்லா கொஸ்சினுக்கும் ஆன்சர் பண்ணுங்க.

உங்க உடம்புக்கு, மனசுக்கு ஏத்த வைடமின்னா சாப்பிடுங்க..

தேவையில்லா வைடம்மின் சாப்பிட்டு, காசை வீனாக்காதீக.


க்ளிக்குங்க...



http://www.webmd.com/vitamins-and-supplements/vitamins-and-supplements-evaluator/default.htm?ecd=wnl_men_090613&ctr=wnl-men-090613_ld-stry&mb=


செலவு செஞ்சாலும் சரியா செய்யுங்க..

காயமே அது மெய்யடா.
அதில் கண்ணும் கருத்தையும் வையடா.

நிசமுங்க...

Tuesday, August 20, 2013

காபி குடியர்கள் அல்லது வெறியர்கள்

காபி குடியர்கள் அல்லது வெறியர்கள் பற்றி நீங்கள் அறிந்தது என்ன ?

காபி நல்லதா கெட்டதா ?

ஒரு நாளைக்கு எத்தனை தடவை எத்தனை அளவு காபி குடிக்கலாம் ?

சிலர் கொஞ்சம் கொஞ்சம் இரண்டு வாய் தான் குடிக்கிறேன் என்று பத்து தரம் காபி ஒரு நாளைக்கு குடிக்கிறார்கள்.  சிலர் ஒரே தடவையில் ஒரு சொம்பு காபியையும் குடித்து , தான் ஒரு தடவை தான் காபி குடிப்பதாக சொல்கிறார்கள்.

எது சரி ?

எந்த காபி அதிக சுவை ?

இந்திய காபி, பிரேசில் காபி , அரேபிய காபி, ஆப்ரிகா காபி.

காபின் எனச் சொல்லப்படுவது அதிகம் உள்ளது காபி பவுடரிலா அல்லது
இன்ஸ்டன்ட் காபியிலா ?

இது போன்ற கேள்விகள் அடங்கிய, உங்கள் அறிவை அதாவது காபி குறித்த
அறிவை நீங்களே சோதித்துக்கொள்ள ஒரு க்விஸ் இங்கே வெப் எம்.டி. தருகிறது.

 கிளிக்கிடுங்கள்.இங்கே. 


 எல்லாவற்றிற்கும் சரியான பதில் தருபவர்க்கு தமிழ் பதிவர் திருவிழா வில்
ஒரு ஸ்ட்ராங் காபி தரப்படும்.

தமிழ் பதிவர் திருவிழாவா ? எங்கேங்க என்று இன்னமும் கேட்பவர்கள்
இந்த இடத்தில் இப்பொழுதே சுடவும். 
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பதிவை பார்த்து வாழ்க்கைக்கு முக்கியமான தகவல்களை பெறவும்.

சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்ற சர்ச்சை எல்லாம் திருவிழா மண்டபத்தில் மட்டுமே.
காபி பற்றிய தகவல்கள், கிவிஸ் மேலே க்ளிக்கிட்டு கிடைக்கவில்லையெனின்
சுட்டினால்
தொடர்பு சரி இல்லை எனின் இந்த லிங்கை உபயோகிக்கவும்.

https://mail.google.com/mail/u/0/?shva=1#inbox/140984a6311944ec

அனைத்து உலகம் புகழும் காபி கதை என்ன ?
ஒரு நல்ல காபி அருந்துங்கள்.
ஜன்ம சாபல்யம் அடையுங்கள்.

நிஜமாகவே க்விஸ்ஸில் நூற்றுக்கு நூறு வாங்கும் அன்பர்களுக்கு தமிழ்
பதிவாளர்களுக்கு,.1.9.2013 அன்று காலை விழா துவக்க நேரத்தில்  சுப்பு தாத்தா பிளாஸ்க்கில் காபி சூடா கொண்டு வந்து தருவார்.

Thursday, July 18, 2013

3 D Map of Brain 50 times More Detailed than Previous Versions.

Three Dimensional Map of Brain  ULTRA HIGH RESOLUTION.
3-D Map  for the First Time.
From the Research Study of Germany

Please read the article from ZME Science.

Wednesday, July 10, 2013

அடுத்த நிமிடம் அவர் கீழே விழுந்துவிட்டார் ( 3 rd Part of the Story )


தொடர்கதையின் முதல் பகுதி இங்கே 1
அடுத்த பகுதி இங்கே. 2

அதை படிக்கவில்லை எனின் அங்கே முதலில் செல்லவும்

3

வோவ்....என்று அவர் வாந்தி எடுத்ததுமே அந்த கம்பார்ட்மெண்டெ அதிர்ந்து போயிற்று

சிரிப்பும் கொம்மாளமும் ஆக இருந்த குடும்ப சூழ்நிலை அதிர்ச்சியும் பயமும் கவலையும் அடுத்தது என்ன செய்வது என்ற புரியாத நிலைக்கு சென்றன

ஒன்னும் இருக்காதுங்க கவலை படாதீங்க.. என்று மனைவி தைரியம் சொன்னாள்  .  கீழ் கிடந்த துணிகளில் வாந்தி சிதறி இருந்தது. அதை துடைத்து சுத்தம் செய்தாள். 

எடுத்த வாந்தியில் ஏதோ ஒன்று பீன்ஸ் போல நீட்டமாக இருந்தது.
அதை கையில் எடுத்து என்ன என்று பார்த்தாள்.  பல்லியோ என அவளுக்கு ஒரு சந்தேகம்.  பீன்ஸ் போலவும் இருந்தது. வெங்காயத்தோல் போலவும் இருந்தது.

எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பிரயாணி  அவருக்கும் ஒரு முப்பது வயது தான் இருக்கும் , தன் மேல் சிந்திய வாந்தியையும் பொருட்படுத்தாது
என் நண்பரை தன மேல் சாய்த்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள துவங்கினான்

ஒண்ணுமில்ல பயப்படாதீங்க  ரயில் புட் உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை
இன்னும் பத்து நிமிசத்திலே ஸ்டேசன் .வந்துடும்
கவலைப் படாதீங்க என்றான்

நண்பர் அவனை நன்றியுடன் பார்த்தார் .  வாந்தி எடுத்த பின் அவர் சற்று சிரமம் இல்லாது இருந்தார்
எங்க சொந்தக்காரங்க ஸ்டேஷனுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க என்றாள் .
இல்லேன்னாலும் கவலை படாதீங்க.. என் காரிலே உங்களை நான் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் அந்த புதிதாக அறிமுகமான பிரயாணி
ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

எல்லோரும் அவரவர் பெட்டிகளை சரி பார்க்கலானார்கள்.

வண்டி நின்றது

நண்பர் தன மனைவியுடன் மகன் மகளுடன் ட்ரைன்  படிக்கட்டில்  காலை வைத்தார்

தலை சுற்றுவது போல் இருந்தது

அடுத்த நிமிடம் அவர் கீழே விழுந்துவிட்டார்

ஒரே கூட்டம்.

ஏன்யா...வழி எங்கிலும் அசுத்தப்படுத்தறீங்க.. என்று எரிச்சலைடைந்தார் ஒரு அவசர பிரயாணி.

(தொடரும்)





 

Wednesday, June 26, 2013

UNDERSTANDING YOUR HEART



KNOW YOUR HEART.

RISKS OF HEART DISEASE AND HOW TO PREVENT IT EARLY.

WEBMD PRESENTS A SLIDE SHOW

CLICK HERE 
OR CUT AND PASTE
THE URL BELOW

 http://www.webmd.com/heart-disease/ss/slideshow-visual-guide-to-heart-disease?ecd=wnl_men_062513&ctr=wnl-men-062513_ld-stry_3&mb=


Sunday, May 12, 2013

எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே ?

(தொடரின் இரண்டாம் பகுதி இது. ) முதல் பதிவு படிக்காதவர்கள் அதை படிக்க இங்கே செல்லவும்

வண்டி புறப்பட்டு ஒரு முப்பது நிமிஷங்கள் ஆகியிருக்கும் .  மணி 8 கூட இன்னும் ஆகவில்லை

அம்மா பசிக்குதம்மா என்றாள் பெண் அவள் தினப்படி பள்ளிக்கு செல்பவள் காலையில் டிபன் 7 மணிக்கே சாப்பிட்டு ஓடுபவள்

அவளுக்கு நண்பரின் மனைவி பதில் சொல்வதற்குள் ப்ரேக்பாஸ்ட் ப்ரேக்பாஸ்ட் என்று கூவிக்கொண்டு காடரிங் வந்தார்கள்

என்ன ?
இட்லி வடை தோசை பூரி சப்பாத்தி பரோட்டா எல்லாமே  இருக்கு

நண்பர் வழக்கமாக ஒன்பது மணிக்கு தான் சாப்பிடுவார்  இருந்தாலும்
சீக்கிரம் சாப்பிட்டு விடுவோம்  எப்படியும் சேலம் போவதற்கு பதினோரு மணி ஆகிவிடும்  அங்கிருந்து வீட்டிற்கு சென்று சாப்பிட மணி ஒன்றாகி விடும்
அது வரைக்கும் சாப்பிடாமல் இருக்க முடியாது. டயபெடீஸ் மருந்து வேற சாப்பிட வேண்டும் என்று அவரும் இரண்டு பூரி ஒரு மசால் வடை சாப்பிட்டார்

மற்றவர்கள் மசால் தோசை வெளுத்துக் கட்டினார்கள்.

சிரிப்பும் விளையாட்டாக அடுத்த இரண்டு மணி நேரம் கழிந்தது

இன்னும் முப்பது நிமிடத்திலே சேலம் சந்திப்பு வந்து விடும் என்று எதிர்த்த
பெஞ்சில் ஒருவர் தன மனைவிக்கு சொன்னார்

அவ்வளவு சீக்கிரமாக போகுமா என்ன என்று அவர் கேட்டார்

இன்னும் இருபது நிமிடங்கள் என்ற நேரத்தில் நண்பருக்கு மேல் வயிற்றில்
ஏதோ குடைவது போல் இருந்தது . எதுக்களிப்பது போல ஒரு உணர்வு

என்னங்க  என்னமோ நெளியறீங்க...  பயம் கலந்த குரலில் மனைவி கேட்கும்
அதே கணம் குபுக் என்று வாந்தி எடுத்தார் நண்பர்..

(தொடரும்)


எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே
ஒரு கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

Tuesday, May 7, 2013

காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?

To keep Listeners' interest alive, we introduce from today a story feature every week.
This is the First One.    

காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?
*****************************************************************************
 ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அணுகு முறை இருக்கிறது.
 
     அந்த மருத்துவத்தில் எந்தத் துறையில் இருந்தாலுமே .....

      உங்களது குடும்ப மருத்துவரை ஒரு தொல்லைக்காக அணுகினீர்கள் என்றா ல்    அவருக்கு உங்கள் உடல் நிலை பற்றிய பழைய தகவல்களும் தெரிந்திருக்கும்.

       அதைத்தவிர உங்களது மன நிலையும் புரிந்திருக்கும்.  அதாவது எந்த ஒரு வியாதி வந்தாலும்  அதைப் பொறுத்துக்கொண்டு மருத்துவரோடு ஒத்துழைப்பீர்களா இல்லயா என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும்.

        சில வியாதிகள் அக்யூட் எனப்படும். அதிக தொல்லை.  உடன் நிவாரணம் இயலும்          மற்றும் சில .. க்ரானிக். தொடர்ந்து தொல்லை தரும்.  மருந்து எடுத்துக்கொண்டாலும் பொறுமையுடன்  இந்த வியாதி அல்லது நிலைமையுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.

        நம்மில் பலருக்கு பொறுமை இல்லை. அதனால் வரும் தொல்லைகள் வியாதியின் கொடுமையைக் காட்டிலும் அதிகம்.

       மருந்து  கொடுப்பது மருத்துவன் கடமை.
.  ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள்.

        இருந்தாலும் சில சமயங்களில் நோயாளிக்கு மட்டுமல்ல வைத்தியருக்கும் பொறுமை இருப்பதில்லை. எதையாச்சும் கொடுத்து இரண்டே நாள்லே ரிசல்ட் காண்பிக்கவேண்டும் அப்படின்னு ஒரு மனப்பாங்கு. புதுசா எது வந்தாலும் அதை யாருக்கு தருவது அப்படின்னு யோசிக்கும்போது நம்ம வந்து மாடுவோம்னா அது நம்ம தலை எழுத்து

       இப்பொழுதெல்லாம் ஒரு குடும்ப மருத்துவர் என்ற கல்சரே மாறி வருகிறது.   நமக்கு நாமே இது தான் என்று   தீர்மானித்துக்கொண்டு அதற்கான ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரை நாடுகிறோம்.

       அவரிடமோ கூட்டம் அதிகம்.  அவர் பணமும் சம்பாதிக்கவேண்டும்.  அதே சமயம் பெயரும் எடுக்கவேண்டும்.

:அந்த டாக்டரிடம் சென்றேன் பாருங்கள். இரண்டே நாட்களில் கம்ப்ளீட் குணமாயிட்டேன்" என்று சொல்லும் நண்பர்களும் டாக்டர்களுக்கு இருக்கிறார்கள்."
இருபது வருஷம் முன்னாடி நடந்த ஒரு விஷயம் . கதை அப்படின்னு சொல்ல முடியாது   உண்மைதான் ஆனா கொஞ்சம் அங்கங்கே கலர் அடித்து இருக்கும் கதை.
       எனது  நண்பர்.  ஒரு நாள் இரவு கல்லூரி தோட்டத்தில் பஃப்ஃபே டின்னர்  பார்ட்டிலே  கலந்துகொண்டு வீட்டுக்கு வந்தார். பத்து மணி இருக்கும்.

உடலில் ஏதோ அரிப்பது போல் இருந்தது. சொறிந்து கொண்டார்.  அரிப்பு தொடர்ந்தது.  உடம்பில் பல இடங்களில் அரிப்பு தோன்றியது.  சொறிந்தால் சிவப்பாக ஆனது.

       ஏதோ விஷக்கடி போல் இருக்கிறது. என்று நினைத்துக்கொண்டார்.  நாளை உபத்திரவம் இருந்தால் டாக்டரிடம் போகலாம் என நினைத்தார்.

        இருந்தாலும் அடுத்த இரண்டு மணி நேரம் அவரது உடல் அரிப்பு எரிச்சல் தோல் தடிப்பு எல்லாமே வீட்டுலே இருக்கறவங்களை காப்ரா படுத்தி ஆம்புலன்ஸை கூப்பிடும் அளவுக்கு போய்விட்டது.

        அம்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பிரபல மருத்துவ மனை .எப்பவுமே அங்கே தான் 24 அவர்சுமே ட்யூடி டாக்டர்.இருப்பாங்க

 வந்தவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில்   புரிந்து கொண்டார்.   ஏதோ ஒரு அலர்ஜி.

(அலர்ஜி என்றால் என்ன என்பது பற்றி இங்கே தக்க விவரம் உள்ளது )

அவர் உண்ட உணவில் இருக்கலாம். இல்லை, அவரை ஏதேனும் ஒரு மொசுக்கட்டை மாதிரி ஒரு பூச்சி கடித்து இருக்கலாம்.  ஏதேனும் கடித்த மாதிரி இருந்ததா எனக்கேட்டார். இவர் தெரியவில்லை.  நான் பார்ட்டிலே மும்முரமா
இருந்தேன்.  என்ன சாப்பிட்டீர்கள் என்றார்.  அவரோ ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு லிஸ்ட் தந்தார். வெஜ், நான் வெஜ், சமாசாரம் எல்லாமே அதில்.மீன் நண்டு, எல்லாமே இருந்தன

உடனடியாக ஒரு இஞ்ச்கஷன் போட்டார்.    அடுத்த 2 நிமிசத்தில் அத்தனை உபத்திரவமும்  அவுட் ஆகிவிட்டது.  கையில் ஒரு சீட்டு கொடுத்தார் இந்த மருந்தை நாளயிலிருந்து ஒரு மூன்று நாளைக்கு சாப்பிடுங்கள் என்றார்

நாளைக்கும் இதுபோலவே தீவிரமாக இருந்தால் கண்டிப்பாக வாருங்கள்
மருந்தை மறக்காமல் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்று அவர் சொன்னதை என் நண்பர் எந்த அளவில் காதில் வாங்கிகொண்டார் ?  வாங்கிக்கொண்டாரா என மருத்துவருக்கு தெரியவில்லை.

மறுநாள் காலை விடிந்தது என்றும் போல

இவரோ 100 பர் சென்ட் சரியாகத்தான் இருந்தார்  குடும்பத்தோடு அவர்கள்
எல்லோருமே அவர்கள் ஊருக்கு அன்றைய தேதியில் செல்வதாக இருந்தது
சேலத்தில் ஏதோ உறவினர் திருமணம்,

என்னங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..
நல்லாத்தான் இருக்கேன் அது எதோ பூச்சி கடி சுத்தமா சரியா போயிடுத்து.
இன்னிக்கு ஊருக்கு போகணுமே ... மனைவி கேட்டாள் .
நல்லாப்போலாம் ஒன்னும் பிரச்னை இல்லை என்றாராம் நண்பர்

சென்ட்ரலுக்கு போய் அங்கிருந்து சேலம் வழியாக செல்லும் ட்ரெயினில் பயணம் ஆனார்கள்.

நடு வழியில்....


(தொடரும். )

**********************************************************************************சுய புராணம்
அப்பாடி , பிட் பிட்டா  இப்படித்தான்  இனிமே கதை எழுதணும்




Thursday, May 2, 2013

Daily Calories Intake ... Thank U Appadurai Sir .

காலை6-8இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150)

அரை கப் (4oz) காபி அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60)

1-2 கப் தண்ணீர் (8-16oz)
(140-210)
8-10இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150)
அல்லது
ஒரு கரண்டி (4-6 oz) வெண்பொங்கல் (முந்திரி நெய் சேராமல்) (110-130)
அல்லது
ஒரு முட்டை (80-100)

அரை கப் காபி (4oz) அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60)

ஒரு வாழைப்பழம் (80-100)

1-2 கப் தண்ணீர் (8-16oz)
(170-310)
10-1250 கிராம் வேர்கடலை (230-250)
அல்லது
பட்டாணி கடலை (75-100)

1 கப் தண்ணீர் (8oz)
(75-250)
மதியம்12-2சேலட் (320-340)

75 கிராம் அரிசி சாதம் (90-100),
இரண்டு கரண்டி சாம்பார் அல்லது ரசம் (80-100),
50 கிராம் பீன்ஸ், 50 கிராம் கேரட், 50 கிராம் பருப்பு கலந்த கூட்டு (70-90),
அரை கப் (4oz) தயிர் (60-100)

1 கப் தண்ணீர் (8oz)
(620-730)
2-4அரை கப் காபி (4oz) அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60) அல்லது
ஒரு கப் பழச்சாறு (சர்க்கரை சேர்க்காமல்) (100-120)
(10-120)
மாலை4-6ஒரு வாழைப்பழம் (80-100)
அல்லது
150 கிராம் திராட்சை (60-80)
அல்லது
ஒரு ஆப்பிள் (90-110)

1 கப் தண்ணீர் (8oz)
(60-110)
6-8இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150)
அல்லது
ஒரு சாதா தோசை (முக்காலடி விட்டம்) - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (90-140)
அல்லது
ஒரு சப்பாத்தி (100-130)

அரை கப் தயிர் அல்லது மோர் (60-100)

1 கப் தண்ணீர் (8oz)
(150-250)
இரவு8-10ஒரு வாழைப் பழம் (80-100)
அல்லது
150 கிராம் திராட்சை (60-80)
அல்லது
ஒரு ஆப்பிள் (90-110)

அரை கப் (4 oz) பால் சர்க்கரை கலக்காமல் (90-140)
(150-250)
( )க்குள் இருக்கும் எண்கள் கேலொரிக் கணக்கு. தேர்வு அளவு மற்றும் செய்முறைக்கேற்ப கேலொரி கணக்கு மாறும். உதாரணத்துக்கு காலை 8-10 உணவை எடுத்துக்கொள்வோம். சாதாரண மீடியம் சைஸ் இட்லி (ஒரு டேபிள்ஸ்பூன் மாவு) அறுபத்தைந்திலிருந்து எழுபத்தைந்து கேலொரிக்குள் இருக்கும். பால் கலக்காத காபி அல்லது டீ பத்து கேலொரி. கொழுப்புச் சத்து அதிகமான பால் (4oz) அறுபது கேலொரி, கொழுப்புச் சத்து குறைவான பால் முப்பது கேலொரி. ஆக காபி,டீ பத்திலிருந்து ஐம்பது கேலொரி வரை. அறுபத்தைந்து கேலொரி இட்லி இரண்டு, பால் கலக்காத காபி (4oz) கணக்குப்படி காலை முதல் உணவு 140 கேலொரியாகிறது. காபி டீ பால் எதுவும் சாப்பிடாமல், இட்லிக்குப் பதில் முட்டை சாப்பிட்டால் குறைந்த அளவுக் கொள்முதல் எண்பதுக்குக் குறைந்துவிடுகிறது. அட்டவணையில் கொடுத்திருக்கும் உணவு வகைகளை இது போல் ஒரு கேலொரி rangeக்குள் அடக்கலாம். ஐட்டங்களில் ஒன்றைக் குறைத்தால் கேலொரிக் கணக்கு இன்னும் குறைக்கலாம். மேற்சொன்ன மெனுப்படி தினமும் குறைந்த அளவு 1400 கேலொரி, அதிகளவு 2200 கேலொரி என்றாலும் இடைப்பட்ட 1700 கேலொரி அளவில் நிற்கும் என்று எதிர்பார்க்கிறே

Thursday, March 14, 2013

Hey Care giver ! You think of your health too !!

 Not unoften, when someone in our family falls sick and suffers chronically, it becomes our prime responsibility to take care of the person who is sick.   The care giver duty comes to the fore when the person who is sick is your child, husband or wife. 

  In several instances when the affected person's future lies in your zone of responsibility, you and I even go to sacrificing our own interests including physical and mental well being.  This results in a burn out condition for the Care giver, who must indeed preserve his or her physical or mental health so that the affected person could continue to receive the care in fullest measure.

  Failure to do so will result in ruining both lives that is both the affected person as well as the care giver.

Here is a wonderful presentation as to how a care giver should plan her daily routines so as to care of oneself as well as the affected person.

Please click here to move on  to the slide show.

 Please cut and paste the URL below, if the above click does not take U there.

http://www.webmd.com/healthy-aging/ss/slideshow-avoid-caregiver-burnout?ecd=wnl_emw_031313&ctr=wnl-emw-031313_ld-stry&mb=