மழை காலம் துவங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. கொசுத்தொல்லை வேறு. என்ன தான் சென்னை கார்பொரேஷன் ஊழியர்கள் ஒரு பக்கம் ஆங்காங்கே சாக்கடை அடைப்புகளை சரிப்படுத்தினாலும், இன்னொரு இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது.
இன்று ஹிந்து தினசரி செய்தி படி, சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்களில் கழிவு நீர் குடி தண்ணீருடன் கலக்கின்றது என சென்னை கார்பொரேஷன் அதிகாரிகள் கண்டுபிடித்து அந்த குடியிருப்புகளில் உள்ள அதிகாரபூர்வமற்ற கனெக்சன் களை சரி செய்ய முனைந்து இருக்கிறார்கள்.
குடி நீரில் சாக்கடை கலந்தால், வரும் வியாதிகள் கணக்கில் அடங்கா. உடன் வரும் நோய்கள், வாந்தி, பேதி தவிர, டைபாய்டு , ஜாண்டிஸ், போன்றவையும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன
மக்கள் கார்ப்பொரேஷன் வினியோக்கிக்கும் நீரை காய்ச்சிக் குடிக்கவேண்டும் . ஹோட்டல்களில் ஆர் ஓ. முறைப்படி நீர் சுத்தம் செய்யப்படவேண்டும்.
இது தவிர அடுக்கு மாடி கட்டிடங்கள், அபார்ட்மெண்ட்களில் உள்ள நீர் தொட்டிகள் வாரம் ஒரு முறையாவது சுத்தப்படுத்தப்பட வேண்டும். எந்த அளவுக்கு ஒரு லிட்டர் நீருக்கு க்ளோரின் ப்ளீச்சிங் பவுடர் கலக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் கலந்து நீரை சுத்தப்படுத்தல் வேண்டும்.
நவராத்திரி தீபாவளி நேரங்களில் சென்னையில் பல இடங்களில் காற்றும் மாசு பட்டு இருக்கிறது. சென்னை தி. நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு காளியம்மன் கோவில் தெரு இவை புகை மண்டலமாக காணப்படுகின்றன .
தெரு ஒர கையேந்தி பவன்களில் தான் மக்கள் பெரும்பாலும் சுண்டல், வடை, பஜ்ஜி, போண்டா, பரோட்டா என சாப்பிட்டு எச்சல் தட்டை ஆங்காங்கே இறைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு வீதியிலும் இந்த கையேந்தி கடைகள் தள்ளு வண்டிகளில் பேல் பூரி, ஜாங்கிரி, வடை போன்றவை மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. இவை எந்த அளவுக்கு சுத்தமானவை
இவற்றினால் வரும் சுகாதார அவலங்களை chennai Corporation Health Officials மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
சில வியாதிகள் தொத்து வியாதிகள். குறிப்பாக ஹெபபடிஸ் ஏ . . எப்படி பரவுகின்றன அவற்றில் இருந்து எப்படி நாம் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்
என இந்த தொடர்பு லிங்கில் காணப்படும் வீடியோ சொல்கிறது.
அவசியம் பார்க்கவும்.
http://www.webmd.com/hepatitis/ss/slideshow-hepatitis-overview
3 comments:
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா... இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...
பயனுள்ள தகவல்கள். பயனுள்ளவை என்றாலே 'பின்பற்றக் கஷ்டமான' என்றும் அர்த்தம் வந்துவிடும்! :)))
அனைவரும்
அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்..!
Post a Comment