your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Sunday, May 12, 2013

எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே ?

(தொடரின் இரண்டாம் பகுதி இது. ) முதல் பதிவு படிக்காதவர்கள் அதை படிக்க இங்கே செல்லவும்

வண்டி புறப்பட்டு ஒரு முப்பது நிமிஷங்கள் ஆகியிருக்கும் .  மணி 8 கூட இன்னும் ஆகவில்லை

அம்மா பசிக்குதம்மா என்றாள் பெண் அவள் தினப்படி பள்ளிக்கு செல்பவள் காலையில் டிபன் 7 மணிக்கே சாப்பிட்டு ஓடுபவள்

அவளுக்கு நண்பரின் மனைவி பதில் சொல்வதற்குள் ப்ரேக்பாஸ்ட் ப்ரேக்பாஸ்ட் என்று கூவிக்கொண்டு காடரிங் வந்தார்கள்

என்ன ?
இட்லி வடை தோசை பூரி சப்பாத்தி பரோட்டா எல்லாமே  இருக்கு

நண்பர் வழக்கமாக ஒன்பது மணிக்கு தான் சாப்பிடுவார்  இருந்தாலும்
சீக்கிரம் சாப்பிட்டு விடுவோம்  எப்படியும் சேலம் போவதற்கு பதினோரு மணி ஆகிவிடும்  அங்கிருந்து வீட்டிற்கு சென்று சாப்பிட மணி ஒன்றாகி விடும்
அது வரைக்கும் சாப்பிடாமல் இருக்க முடியாது. டயபெடீஸ் மருந்து வேற சாப்பிட வேண்டும் என்று அவரும் இரண்டு பூரி ஒரு மசால் வடை சாப்பிட்டார்

மற்றவர்கள் மசால் தோசை வெளுத்துக் கட்டினார்கள்.

சிரிப்பும் விளையாட்டாக அடுத்த இரண்டு மணி நேரம் கழிந்தது

இன்னும் முப்பது நிமிடத்திலே சேலம் சந்திப்பு வந்து விடும் என்று எதிர்த்த
பெஞ்சில் ஒருவர் தன மனைவிக்கு சொன்னார்

அவ்வளவு சீக்கிரமாக போகுமா என்ன என்று அவர் கேட்டார்

இன்னும் இருபது நிமிடங்கள் என்ற நேரத்தில் நண்பருக்கு மேல் வயிற்றில்
ஏதோ குடைவது போல் இருந்தது . எதுக்களிப்பது போல ஒரு உணர்வு

என்னங்க  என்னமோ நெளியறீங்க...  பயம் கலந்த குரலில் மனைவி கேட்கும்
அதே கணம் குபுக் என்று வாந்தி எடுத்தார் நண்பர்..

(தொடரும்)


எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே
ஒரு கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மசால் வடை ஏதோ வேலை செய்து விட்டது...!

இராஜராஜேஸ்வரி said...

எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே யாருக்குத்தெரியும்??

பயணத்தில் அசௌகரியம்
ரொம்ப சிரமம்...

Anonymous said...


அப்புறம் என்ன நடந்தது?.
வேதா. இலங்காதிலகம்.

Geetha Sambasivam said...

ஏற்கெனவே வயிற்றுக்கோளாறு இருந்திருக்கணும், அல்லது ரயிலில் வாங்கிச் சாப்பிட்டது ஒத்துக்கொண்டிருக்காது. :(

தி.தமிழ் இளங்கோ said...

அப்புறம், உங்கள் நண்பருக்கு என்ன சார் ஆச்சு? சஸ்பென்ஸை எப்போது உடைக்கப் போகிறீர்கள்?

Geetha Sambasivam said...

ஆமா இல்ல!! மறந்தே போச்சு! :))))

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு நாளாக் காத்துக் கொண்டிருக்கும் எங்கள் மேல் கொஞ்சம் கருணை வைக்கக் கூடாதா.சுப்பு சார்.