தொடர்கதையின் முதல் பகுதி இங்கே 1
அடுத்த பகுதி இங்கே. 2
அதை படிக்கவில்லை எனின் அங்கே முதலில் செல்லவும்
3
வோவ்....என்று அவர் வாந்தி எடுத்ததுமே அந்த கம்பார்ட்மெண்டெ அதிர்ந்து போயிற்று
சிரிப்பும் கொம்மாளமும் ஆக இருந்த குடும்ப சூழ்நிலை அதிர்ச்சியும் பயமும் கவலையும் அடுத்தது என்ன செய்வது என்ற புரியாத நிலைக்கு சென்றன
ஒன்னும் இருக்காதுங்க கவலை படாதீங்க.. என்று மனைவி தைரியம் சொன்னாள் . கீழ் கிடந்த துணிகளில் வாந்தி சிதறி இருந்தது. அதை துடைத்து சுத்தம் செய்தாள்.
எடுத்த வாந்தியில் ஏதோ ஒன்று பீன்ஸ் போல நீட்டமாக இருந்தது.
அதை கையில் எடுத்து என்ன என்று பார்த்தாள். பல்லியோ என அவளுக்கு ஒரு சந்தேகம். பீன்ஸ் போலவும் இருந்தது. வெங்காயத்தோல் போலவும் இருந்தது.
எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பிரயாணி அவருக்கும் ஒரு முப்பது வயது தான் இருக்கும் , தன் மேல் சிந்திய வாந்தியையும் பொருட்படுத்தாது
என் நண்பரை தன மேல் சாய்த்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள துவங்கினான்
ஒண்ணுமில்ல பயப்படாதீங்க ரயில் புட் உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை
இன்னும் பத்து நிமிசத்திலே ஸ்டேசன் .வந்துடும்
கவலைப் படாதீங்க என்றான்
நண்பர் அவனை நன்றியுடன் பார்த்தார் . வாந்தி எடுத்த பின் அவர் சற்று சிரமம் இல்லாது இருந்தார்
எங்க சொந்தக்காரங்க ஸ்டேஷனுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க என்றாள் .
இல்லேன்னாலும் கவலை படாதீங்க.. என் காரிலே உங்களை நான் கூட்டிக் கொண்டு போகிறேன் என்றார் அந்த புதிதாக அறிமுகமான பிரயாணி
ரயில் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.
எல்லோரும் அவரவர் பெட்டிகளை சரி பார்க்கலானார்கள்.
வண்டி நின்றது
நண்பர் தன மனைவியுடன் மகன் மகளுடன் ட்ரைன் படிக்கட்டில் காலை வைத்தார்
தலை சுற்றுவது போல் இருந்தது
அடுத்த நிமிடம் அவர் கீழே விழுந்துவிட்டார்
ஒரே கூட்டம்.
ஏன்யா...வழி எங்கிலும் அசுத்தப்படுத்தறீங்க.. என்று எரிச்சலைடைந்தார் ஒரு அவசர பிரயாணி.
(தொடரும்)
1 comment:
கடவுளே, இன்னும் சரியாகவில்லையா! :(((((
Post a Comment