உடம்புக்கு வந்துடுச்சுன்னா, ஓடறோம் டாக்டர் கிட்டே.
அவரும் ஒரு லிஸ்ட் போட்டு, இந்தா சாப்பிடு அப்படின்னு சொல்றாரு.
லிஸ்டை பார்த்தா பத்து பேரு கீது.
இன்னா சாரே.. இத்தனையுமா ? அப்படின்னு கேட்கறப்போ,
இல்ல, முதல் ஒன்னை மட்டும் மூணு நாளைக்கு,
அடுத்ததெல்லாம் அடுத்த ஆறு மாசத்துக்கு அப்படின்னு சொல்றாரு.
என்னனு பார்த்தா,
ஏதோ ஏதோ புரியாத பெயர்லே எழுதி இருக்குங்க..
அடிநோசில்,
ஒமேகா 3 ஜி.
பயோடின்
பாலிக் ஆசிட்.
ப்ரோ பயோடிக்
இதுல்லாம் நான் கொடுத்ததில்ல இருக்கு ...கொஞ்சம் தொடர்ந்து சாப்பிடுங்க..
அப்படின்னு சொல்றாரு.
முன்னாடி எல்லாம் வைட்டமின் ஏ , பி லே பி 1 , பி 2 , ப 6, பி 12 அப்படின்னு பத்து வகை, சி, டி, இ, அப்படின்னு சொல்வாக.
இப்ப பூட் சப்ளிமெண்ட் அப்படின்னு சொல்றாக. ஆண்டி ஆக்சிண்டேன்ட். நான் கூட புரியாம எந்த ஆண்டிக்கு ஆக்சிடெண்டு அப்படின்னு கேட்டா சிரிக்கிறாரு.
இதெல்லாம் அந்த ஆண்டி இல்ல. உடம்புக்கு வர்ற நோயை தடுக்கற சக்தி வாய்ந்த உயிருச்சத்துக்க அப்படின்னு இங்க்லீசுலே சொல்றாரு.
எல்லாமே யான விலை குதிரை விலை.
என்ன செய்யறது? உடம்பு முக்கியமில்ல.
பென்சன்லே முக்கா வாசி மருந்துக்கே போயிடறது.
உங்களுக்கு என்ன டானிக் வேனும் வைட்டமின் வேணும் அப்படிங்கறது
தெரிஞ்சுக்கணும் அப்படின்னு இண்டரஸ்ட் இருந்தா...
இந்த இடத்துக்கு போய் எல்லா கொஸ்சினுக்கும் ஆன்சர் பண்ணுங்க.
உங்க உடம்புக்கு, மனசுக்கு ஏத்த வைடமின்னா சாப்பிடுங்க..
தேவையில்லா வைடம்மின் சாப்பிட்டு, காசை வீனாக்காதீக.
க்ளிக்குங்க...
http://www.webmd.com/vitamins-and-supplements/vitamins-and-supplements-evaluator/default.htm?ecd=wnl_men_090613&ctr=wnl-men-090613_ld-stry&mb=
செலவு செஞ்சாலும் சரியா செய்யுங்க..
காயமே அது மெய்யடா.
அதில் கண்ணும் கருத்தையும் வையடா.
நிசமுங்க...