your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Tuesday, September 10, 2013

WHAT BOTHERS U ? உங்கள் உடம்புக்கு என்ன ?

உங்கள் உடம்புக்கு என்ன ?

SYMPTOMS CHECKER .
பல்வேறு நோய்களுக்கு ஒரே விதமான குறிகள் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.  
உதாரணமாக உங்கள் புறங்கால் (அதாவது காலில், பாதத்திற்கு மேல் உள்ள பகுதி ) சற்று வீக்கமாக இருப்பது போலத் தோன்றினால், அது என்னவாக இருக்கலாம்.
நீங்கள் ஒரு இருபது முப்பது வயது இளைஞர் ஆக இருக்கும் பட்சத்தில் அது ஒரு பூச்சி கடியாக, கொசுக் கடியாக இருக்கலாம். சற்று அரிப்பது போலத் தோன்றினால் ஏதோ ஒரு அலர்ஜி தான். கொஞ்ச தனக்குத் தானே சரியாகிவிடும் self limiting என்று நினைப்பதில் தவறில்லை.
ஆனால், நீங்கள் ஒரு அறுபது வயதுக்கு மேற்பட்டவராய் இருந்து உங்கள் புறங்கால் , சற்று வீங்கி தொடர்ந்து இருந்தால், அது என்னவாக இருக்கலாம்?

உங்களுக்கு ரத்த கொதிப்பு இருக்கையில் ஒரு இருதய நோயாக அயோர்டிக் ரிகர்ஜிடேஷன் ஆக இருக்கலாம்.
சிறுநீர் செல்வதில் தொடர்ந்து உபாதைகள் இருந்தால் அது கிட்னி சம்பந்தப்பட்ட சமாசாரம் ஆக இருக்கலாம்.
வாடர் ரிடென்சன் ஆக, வீனஸ் இன்சபீயன்ஷி எனச் சொல்லப்படும் நிலை. அதாவது உங்கள் ரத்த நாளங்களில் முக்கியமாக கால்களில் ஏதேனும் அடைப்போ அல்லது சிறிய கட்டிகளோ இருக்கலாம்.
இத்தனையும் இல்லை, காலை வெகு நேரம் தொங்கப்போட்டுக்கொண்டு இருந்தாலும் இருக்கலாம்.

இது தான் என்று சும்மா இருப்பது சரியல்ல.
SHORT LIST THE POSSIBLE CONDITIONS THAT COULD HAVE CAUSED THE SYMPTOMS.
என்னவாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்பது நல்லது.
PLEASE SPEND A FEW MINUTES BY OPENING THE LINK BELOW .
கீழ்க்கண்ட வலைதனை திறந்து அங்கு வரும் கேள்வி படத்தை பார்த்து அதற்கேற்றபடி உங்கள் பதிலை அளியுங்கள்.
http://symptoms.webmd.com/default.htm#introView

ஒரு நாலைந்து நிலைகளுக்குள் ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
FIRST CHECK UP WITH YOUR FAMILY PHYSICIAN.
நீங்களே அதற்கான ஒரு ஸ்பெசலிஸ்ட் ஒருவரை அணுகாமல், உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.
THEN FIX THE SPECIALIST.
அவர் மூலம், தேவைப்படின், சிறப்பு மருத்துவரை அணுகுங்கள்.
NEVER EVER TREAT THE SYMPTOMS FOR TOO LONG.
நோய்க்கான அறிகுறிகள் எதையும் நீங்களே தொடர்ந்து வீட்டு வைத்தியம் என்று செய்து கொண்டு இருக்க வேண்டா. ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குள் எதுவுமே இயல்பான நிலைக்குத் திரும்பாவிடின் மருத்துவரை அணுகுவது நன்று.
FIX THE ROOT CAUSE OF THE PROBLEM OR THE SYMPTOM
GET PROPER ADVICE
எந்த ஒரு உபாதையாக இருந்தாலும் அதற்கான மூல காரணம் அறியப்படவேண்டும்.
BY FIXING THE RIGHT PHYSICIAN WHO SHOULD BE ABLE TO
FIX YOUR PROBLEM
FIND FOR U THE RIGHT SOLUTION.
சரியான மருத்துவர் தான் உங்களுக்கு சரியான மருந்துகளை தர இயலும்.

DONT BE IN HASTE AS OTHERWISE U WILL BE WASTING NOT ONLY YOUR MONEY AND ENERGY BUT YOUR PRECIOUS TIME TOO.

இதுதான் நோய் என்று நீங்களே முடிவு செய்வதை விட, முதற்கண் உங்கள் குடும்ப வைத்தியரை அணுகுவது நன்று.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று வாளா இருந்துவிடாதீர்கள். 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நாமே ஏதேனும் நோய் என்று கருதிக் கொள்வது மிகப்பெரிய தவறு... இணைப்பில் பார்க்கிறேன் ஐயா...