your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Thursday, July 30, 2009

சின்சினாட்டி பரிசோதனை

ஸ்ட்ரோக் வர இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள இதோ !!
சின்சினாட்டி பரிசோதனை


மூளையின் சின்னஞ்சிறு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்பொழுதோ அல்லது ரத்த நாளங்கள் உட்பகுதி தடிப்பதாலோ ரத்த ஓட்டம் தடைபட்டு, அதனால் உயிர் அணுக்கள் இறக்கும் வாய்ப்பும் அதன் காரணமாக உடலின் ஒரு பகுதி, கை, கால் அசைவற்று போவதையோ, முகத்தில் கோணல் அல்லது இறுக்கம், மரத்துப்போதல் ஏற்படுகிறது. நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஒருபக்கமாக கால் போகிறது.
ஸ்ட்ரோக் ஒருவருக்கு வரப்போகிறது என்பதை அறிந்து கொள்ள‌ இயலுமா என்றால், முடியும் என்கிறார்கள். மருத்துவகத்துக்கு உடனடியாக அவரை அழைத்துச்சென்று
ஒரு நரம்பியல் நிபுணரின் ஆலோசனை பெறவேண்டும்.

ஸ்ட்ரோக் ஒருவருக்கு உடனடியாக வர இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க மூன்று எளிய சோதனைகள்.

உடலின் கை, கால், முகம் அசைவுகளில் மாற்றம் இருப்பின், அவரை

1. வாய் விட்டு சிரிக்கசொல்லுங்கள்.

2. கைகள் இரண்டையும் மேலே தூக்கச்சொல்லுங்கள். பின் பக்கவாட்டில் கொண்டு வந்து மறுமுறை மேலே தூக்கச்சொல்லுங்கள்.

3. எளிய வாக்கியம் ஒன்றைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.

இந்த மூன்றினையும் அவர் செய்வதில் சிரமங்கள் ஏதும் இல்லையென்றால் ஸ்ட்ரோக் வரும் அபாயம் உடனடியாக இல்லை.

இருப்பினும் உடனடியாக, அவரை மருத்துவர் கண்காணிப்புக் கொண்டு செல்லுங்கள்.
ஒரு ஆஸ்பிரின் மாத்திரை (குறைந்த அளவு ) உதவி செய்யும் என்றாலும் மேற்கொண்டு அதனைக் கொடுப்பதா
என்பதை மருத்துவர்களே முடிவு செய்ய வேண்டும்.


For further information on this, kindly log on to:

http://www.neurologychannel.com/stroke/symptoms.shtml

No comments: