combo of medications
ஒரு மாத்திரையா அல்லது ஒரு கூடை மாத்திரையா ?
சென்ற மாதம் நானும் என் மனைவியும் ஆள்வார்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவகத்தில் சேரவேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ஏதோ ஃப்ளூ போல துவங்கியது சில நாட்களில் என்னவென்றே புரியாத நிலையில் உடல் வலி, இருமல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளில்
கொண்டுபோய் விட, மருத்துவர் எங்களை உள் நோயாளிகளாக அமர்த்தி பல்வேறு பரிசோதனைகள் செய்து, பிறகு
ஏகப்பட்ட ஆன்டி பயாடிக், ஊசி மூலமாகவும் வாய் வழியாகவும் சாப்பிட்டு, ஏதோ சரியான மாதிரி இருந்தபோது, இனி
போதும், நீங்கள் போகலாம் என்று ஆஸ்பத்திரியிலிருந்து விடுதலை பெற்றோம்.
ஒரு நாளைக்கு என்று பார்த்தால் வயதான என்னைப் போன்ற பலர், ஒரு கிட்டத்தட்ட 5 முதல் 10 மாத்திரைகள்
இரு வேளை அல்லது மூன்று வேளைகள் சாப்பிடுகிறார்கள். ருமாடிஸம் ( ரொமான்டிஸம் அல்ல ) , டயாபிடிஸ்
ரத்தக் கொதிப்பு அல்லது அழுத்தம் போன்ற பல்வேறு உபாதைகள் தனியாகவோ அல்லது சேர்ந்தோ 50 வயது
கடந்தவர்களில் சுமார் 40 முதல் 60 விழுக்காடு மக்களுக்கு இருப்பதால், இவர்கள் சாப்பிடும் மாத்திரைகள் ஏற்படுத்தும்
பின் விளைவுகள் மட்டுமல்ல, ஒன்றோடு ஒன்று ஒவ்வாத நிலையில் ஏற்படுத்தும் பக்க விளைவுகளும் அதிகம்.
இதற்காக இவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையில்லாமல் தாமாகவே மருந்தகத்தில் வாங்கி சாப்பிடும் மாத்திரைகளும்
சேரும்.
நான் மருத்துவகத்தில் இருந்தபோது ஒரு முதியவரும் இருந்தார். வெகு நகைச்சுவை உணர்வோடு எல்லோரிடமும்
பேசிக்கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது கால் நடையாகவே இந்தியாவுக்கு வந்தாராம்.
கிட்டத்தட்ட உலகத்தில் எல்லா நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். இப்போது வயது 89 தான் ஆகிறது என்றார்.
அவர் வயதிற்கு அவர் நடப்பதும், சாப்பிடுவதும், பேசுவதையும் பார்த்தால் ஆரோக்கியமானவராகவே தோன்றியது.
என்ன பிரச்னை இவருக்கு என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்றார். ஒன்றுமில்லையா அப்படி என்றால் ஏன்
இங்கு வந்தீர்கள் என்று கேட்டேன். தூக்கம் வரவில்லை, நான் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறேன், என்
பையனுக்கு (அவனுக்கு வயது 65 ) தொந்தரவாக இருக்கும் போல் இருக்கிறது. அதனால், என்னை இங்கே
அட்மிட் செய்து, தூங்கப்பண்ணச்சொல்லி இருக்கிறார் , என்றார்.
இரவு 8 மணி இருக்கும். நர்ஸ் அவரிடம், தாத்தா, மருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி, நீரும் மாத்திரைகளும்
தந்தார். ஒரு கணம் அதைப் பார்த்து நான் திடுக்கிட்டேன். ஏன் என்றால் மொத்தம் 15 ஆமாம், நம்புங்கள்,
சேர்ந்தார்போல், 15 கொடுத்து, சாப்பிடுங்கள் என்றாள். அதையும் அவர் சாப்பிட்ட பின், தூக்க மாத்திரை
இருக்கிறதா இதில் என்றார். நர்ஸ், இல்லை, அதை இன்னும் கொஞ்ச நேரம் கழித்து தருகிறேன் என்று சொன்னார்.
என்ன மாத்திரைகள் என்று கேட்டேன். நர்ஸ் சொல்ல மறுத்துவிட்டாள். ப்ரொஃபஷணல் எதிக்ஸ் போலும்
என நினைத்து வாளா இருந்தேன்.
மறு நாள் கவனித்தேன். பல மாத்திரைகள் சும்மா ! அவைகள் மருந்துகள் அல்ல, சும்மா மருந்துகள் போல
அவர் நினைத்துக் கொண்டு சாப்பிடுகிறார் , அவ்வளவு தான். இத்தனை மாத்திரைகள் சாப்பிட்டால் தான்
தாம் நன்றாக இருக்க முடியும் என்று அவர் நினைக்கிறார். அவ்வளவு தான்.
இத்தனை மருந்துகள் தேவையா ? இன்றைய மருத்துவ சமூகம் என்ன சொல்கிறது ?
இந்த செய்தியை அவசியம் படியுங்கள்.
http://edition.cnn.com/2008/HEALTH/12/23/drugs.mixture/index.html
" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா " WHAT CONCERNS YOU AND ME PHYSICALLY AND MENTALLY.
your attention please....
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”
********************************************************
IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC .
THIS bilingual BLOG
IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC .
****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.
********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.
No comments:
Post a Comment