" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா "
ஆமாம். ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு தமிழ் படத்திலே காமெடியன் தங்கவேலு பாடுவாரு. முக்காலத்துக்கும் இது உண்மை. இருக்கிற வரைக்கும் கையும் காலும் நல்லா இருக்கணும்லே. சுவர் நல்லா இருந்தாத்தானே சித்திரம் எழுத முடியும் . அதனாலே தான், நம்ம நம்ம உடம்பைப்பத்தி, முக்கியமா,நமக்கு வரக்கூடிய சின்னச்சின்ன உபாதைகள், பெரிய பெரிய வியாதிகள் இவையெல்லாம் என்னென்ன அப்படின்னும் தெரிஞ்சு வச்சுக்கனும். ஏதோ உடம்புக்கு வந்துடுச்சா, டாக்டருகிட்ட போவோம். அவரு கொடுக்கிறதை அப்படியே முழுங்கிடுவோம். பகவான் கிட்ட எல்லா பாரத்தையும் போட்டுடுவோம் அப்படிங்கறது ஒரு அப்றோச். டாக்டர் சார்! எனக்கென்ன உடம்புன்னு தீர விசாரிச்சு அதுக்கேத்தமாதிரி நம்ம லைஃப் ஸ்டைலை அமெச்சுக்கறது இன்னொரு அப்ரோச்.
வியாதியே வராம தடுத்துக்கரது தேர்ட் அப்ரோச்.
வள்ளுவர் சொல்றாரு:
" எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை
அதிர வருவதோர் நோய் "
நமக்கு நம்ம குடும்ப பரம்பரை சொத்துக்களா வரதெல்லாம் என்ன வியாதி ?
நாமா நம்ம அடாவடி பழக்கத்தினாலே ஏற்படுத்திக்கர வியாதி ?
நம்ம சுற்றுப்புற சூழ்னிலையாலே வர வியாதி ?
இவையெல்லாம் ஓரளவுக்காகவாவது தெரிஞ்சுவச்சுக்கவேணும்.
இந்த வலைப்பதிவு இந்த அவேரினஸ் வளரவேணும் என்பதற்காக ஆரம்பிச்சிருக்கேன்.
உனக்கேண்டா இந்த வேலைன்னு கேட்காதீக...
நம்ம படிக்கறதை மற்றவருக்கும் சொல்லி அவங்களும் பயன்படணும் இல்லையா.
வாங்க..படிங்க. பயன் பெறுங்க.
" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா " WHAT CONCERNS YOU AND ME PHYSICALLY AND MENTALLY.
your attention please....
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”
********************************************************
IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC .
THIS bilingual BLOG
IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC .
****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.
********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.
No comments:
Post a Comment