வலின்னா வலி அப்படி ஒரு வலி !
இடுப்புக்குக்கு கீழே முழங்காலுக்கு மேலே . முன் பக்க வலி. அப்பப்ப தான் வரத்து. கால சைட் வேஸ் லே நகத்தினா ஜாஸ்தியாக ஆகிவிடறது.
வலி என்பதே ஒரு சிம்ப்டம் தாங்க.. சாதாரண வலி நிவாரணிகள் ஆனா பாரசெடமால் இல்லேன்னா டைக்லோபின் மாத்திரைகள் சாப்பிட்டு அடங்கவில்லை என்றால் டாக்டர் எக்ஸ் ரே எடுத்து பார்க்கச் சொல்வார்.
எங்க டாக்டர் முதற்கண் ட்ரமடல் மாத்திரை கொடுத்தார். அப்பறம் டைக்லோபின் கொடுத்தார். இரண்டு எக்ஸ் ரே எடுக்கச் சொன்னார். இரண்டு நாள் கழிச்சு இன்னும் இரண்டு எக்ஸ் ரே எடுக்கச்சொன்னார். இடுப்பு எலும்பு தேஞ்சு போயிருக்கு. கொஞ்சமா லாம்பர் கனால் சுருங்கி இருக்கு. வயசாயிடுச்சோ இல்லையோ !! என்றார். ஆமாம். ஆறு கழுதை வயசாயிடுத்து என்றேன். சிரித்தார்.
ற்றாக்சன் போட்டார் ஒரு ஆறு நாளைக்கு.
ஹீட் பாட வைத்தார்.
வலி குறைய வில்லை. காலை நகதினால் வலிக்கிறது.
என் தங்கை அங்கே தன பக்கத்து சித்த வைத்திய கடைகள் இருந்து ரூமஜீவி தைலம் பிண்ட தைலம் வாங்கினு வந்து இரண்டையும் கலந்து போடுங்க அப்படின்னா.
என் புள்ளை சலோன் ஹாட் பாச் வாங்கி மேல போடு அப்படின்னா.
எல்லாத்துக்கும் பெப்பே என்றது வலி.
ஒரு தினப்படி பிசயோ தெரபி எக்சர்சைய்ஸ் சொல்லிகொடுத்தார். குப்புற படுத்துண்டு, தலையை மார்பு வரை தூக்கணும். அஞ்சு தரம். அப்பறம் இடது காலை முட்டி மடியாம அஞ்சு தரம். வலது காலை முட்டி மடியாம அஞ்சு தரம்.
ஒரு நாளைக்கு இரண்டு தரம் செய்யுங்க என்றார். வலி தேவலாம் என்று தோன்றியது.
ஒரு தினப்படி பிசயோ தெரபி எக்சர்சைய்ஸ் சொல்லிகொடுத்தார். குப்புற படுத்துண்டு, தலையை மார்பு வரை தூக்கணும். அஞ்சு தரம். அப்பறம் இடது காலை முட்டி மடியாம அஞ்சு தரம். வலது காலை முட்டி மடியாம அஞ்சு தரம்.
ஒரு நாளைக்கு இரண்டு தரம் செய்யுங்க என்றார். வலி தேவலாம் என்று தோன்றியது.
வலி ஒரு நிதர்சனம். அதை அனுபவிக்கிரவங்களுக்குதான் அதை தெரியும்.
வலியைப் பொறுத்துக்கொண்டு தினப்படி காரியங்களை செய்ய வழி இருக்கிறாதா ?
Yes. Laughter is the Best Medicine.
இருக்கு அப்படின்னு இந்த சைட் சொல்லுது.
என்ன சொல்லுது அப்படின்னு பார்த்தேன்.
சிரிங்க ...ஏன்னா சிரிப்பு ஒண்ணுதான் வலிக்கு வலியைப் பொறுத்து
கொள்வதற்கு சரியான மருந்து அப்படின்னு சொல்லுது.
நீங்களும் படிக்கணுமா? இந்தாங்க இங்கே க்ளிக் பண்ணுங்க.
அங்கங்க கொஞ்சம் ஏ தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
1 comment:
வலி குறைந்து நலமடைய பிரார்த்திக்கிறேன்..
Post a Comment